செய்திகள்
கோப்புபடம்

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு தொழில் நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைப்பு

Published On 2021-04-14 13:20 GMT   |   Update On 2021-04-14 13:20 GMT
செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு எந்த தேதியில் நடைபெறும் என்பது அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாயில் தற்போது நடத்தப்படும் ஆய்வுகளுக்கு ரோவர் என்ற வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஆய்வுப் பணிகளுக்கு இலகுரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. இறுதியாக கடந்த ஆண்டு இந்தச் சோதனை வெற்றியடைந்தது.

ஒரு கிலோ 800 கிராம் எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர், ஈர்ப்பு விசை இல்லாததால் பூமியில் இயங்குவதை விட அதிக வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை பறக்க விடும் முயற்சிகள் நாசாவால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால்  தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2வது முறையாக இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


 
விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு செவ்வாயில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு எந்த தேதியில் நடைபெறும் என்பது அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்  என்று நாசா தெரிவித்துள்ளது.

இன்ஜினிட்டி (Ingenuity) பெயருடைய அந்த ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டதாகும்.

Tags:    

Similar News