செய்திகள்
கேமரூன் பாதுகாப்பு படை (கோப்பு படம்)

கேமரூன்: போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி

Published On 2020-04-07 00:11 GMT   |   Update On 2020-04-07 00:11 GMT
கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
டுவாலா:

ஆப்பிரிக்க நாடுகளான கேமரூன், நைஜீரியா, சாட், மாலி மற்றும் நைகர் ஆகிய நாடுகளை ஒன்றினைத்து இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசை நிறுவும் நோக்கத்தோடு போகோஹரம் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த பயங்கரவாத குழு பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபாட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேமரூன் நாட்டின் அம்ஜிடி நகரத்தில் உள்ள ஒரு மத கூடத்தில் நேற்று முன்தினம் பிராத்தனையை முடித்து விட்டு பலர் வெளியே வந்தனர்.

அப்போது அங்கு வந்த இரண்டு போகோஹரம் பயங்கரவாதிகள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 7 பொதுமக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.

அதேபோல், அந்நாட்டின் சிஹஹு மாகாணத்தில் உள்ள தேசிய சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், உயிரிழந்த வீரர்களிடமிருந்த ஆயுதங்களையும் பயங்கரவாதிகள் எடுத்து சென்றனர்.
Tags:    

Similar News