செய்திகள்
இந்தியாவில் இருந்து சொந்த நாடு திரும்பிய பாகிஸ்தானியர்கள்

இந்தியாவில் சிக்கித் தவித்த ஐந்து பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பினர்

Published On 2020-03-29 11:30 GMT   |   Update On 2020-03-29 11:30 GMT
இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால் நொய்டா மற்றும் டெல்லியில் தவித்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பேர் சொந்த நாடு திரும்பினர்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. சமூக தொற்றாக மாறிவிடக் கூடாது என்பதற்காக 21 நாட்கள் நாள்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த வகையான போக்குவரத்தும் இல்லாத காரணத்தால் மக்கள் இருந்த இடத்தில் அப்படியே தங்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்தியா தனது எல்லைகளை மூடியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து மெடிக்கல் விசா மூலம் இந்தியா வந்த ஐந்து பேர் நொய்டா மற்றும் டெல்லியில் மாட்டிக் கொண்டனர். அவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதால்  டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதுரகத்தின் உதவியை நாடினர். தூதரகம் அவர்களை சொந்த நாடு அனுப்ப ஏற்பாடு செய்தது.

இறுதியாக அவர்கள் அட்டாரி - வாகா எல்லை வழியாக இன்று பாகிஸ்தான் சென்றனர். இந்தத் தகவலை டெல்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News