செய்திகள்
தாக்குதல் நடத்தப்பட்ட கிராமம் (கோப்பு படம்)

மாலி கிராமத்தில் மீண்டும் தாக்குதல்- 21 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற கும்பல்

Published On 2020-02-15 05:55 GMT   |   Update On 2020-02-15 05:55 GMT
மாலியில் கடந்த ஆண்டு தாக்குதலுக்கு உள்ளான கிராமத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர்கள், அங்கிருந்த 21 மக்களை சரமாரியாக சுட்டுக்கொன்றது பதற்றத்தை ஏற்படுத்தியது.
பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஆயுதக் குழுவினரால் இனவாத மோதல்கள் அதிகரித்துள்ளன. இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இதுதொடர்பாக ஐ.நா. அமைப்பு தொடர்ந்து கவலை தெரிவித்துவருகிறது. 

இந்நிலையில், மத்திய மாலியில் உள்ள மோப்டி பிராந்தியத்தில் உள்ள ஒகோசாகோ கிராமத்திற்குள் நேற்று அதிகாலை துப்பாக்கிகளுடன் சிலர் நுழைந்து பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். வீடுகளுக்கும் தீ வைத்தனர். வீடுகளில்  உள்ள பொருட்களை சூறையாடி கொள்ளையடித்துச் சென்றனர். இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து கேள்விப்பட்டதும், ஐநா அமைதிப்படையின் அதிவிரைவுப்படையினர் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் மேற்கொண்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கடந்த ஆண்டு இதே கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News