செய்திகள்
மிக்கைல் மிஷூஸ்டின்

ரஷியாவின் புதிய பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் - புதின் அறிவிப்பு

Published On 2020-01-16 14:51 GMT   |   Update On 2020-01-16 14:51 GMT
ரஷியாவின் புதிய பிரதமராக மிக்கைல் மிஷூஸ்டின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ:

ரஷியா நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். கடந்த 2012-ம் ஆண்டு முதல் பிரதமராக பதவிவகித்து வந்தார்.

இதற்கிடையே, ரஷிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாடிமிர் புதினிடம் சமர்ப்பித்தார். 

இந்நிலையில், ரஷியாவின் புதிய பிரதமராக மிக்கைல் மிஷூஸ்டின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இவர் தற்போது பெடரல் வரி சேவையின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த டிமிட்ரி மெத்வதேவ் ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார் என தகவல் வெளியானது.
Tags:    

Similar News