செய்திகள்
கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயு

கனடா பாராளுமன்றத்தை கலைத்தார் பிரதமர் ஜஸ்டின் டுருடேயு

Published On 2019-09-11 15:23 GMT   |   Update On 2019-09-11 15:23 GMT
கனடா பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
டொரான்ட்டோ:

கனடா பாராளுமன்றத்துக்கு 21-10-2019 அன்று நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ இன்று சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரைத்தார்.



இதைத்தொடர்ந்து  ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் இன்று ஒப்புதல் அளித்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News