செய்திகள்
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி

இந்திய விமானங்கள் பறக்க தடையா? - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மறுப்பு

Published On 2019-08-29 07:31 GMT   |   Update On 2019-08-29 07:31 GMT
இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து வான் எல்லையை மூடப்போவதாக வெளியான தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மறுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 5-ம் தேதி ரத்து செய்தது. அத்துடன், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அத்துடன் இந்தியாவின்  நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து, வான்வெளியை மூடுவது பற்றி பிரதமர் இம்ரான் கான் ஆலோசித்ததாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. பாகிஸ்தான் மந்திரி பாவத் உசைன் டுவிட்டரில் இதனை குறிப்பிட்டிருந்தார். எனவே, விரைவில் இந்திய விமானங்களுக்கான வான்வெளியை பாகிஸ்தான் மூடலாம் என பேசப்பட்டது.

ஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி குரேஷி மறுத்துள்ளார். இந்தியாவுக்கான வான்வெளியை மூடுவது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்தபிறகே அத்தகைய முடிவு எடுக்கப்படும் என்றும் குரேஷி கூறியுள்ளார்.

ஏற்கனவே பாலக்கோட் பயங்கரவாத முகாம்கள் மீத இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் பகுதிக்குள் விமானங்கள் பறக்க தடை விதித்து வான்வெளியை மூடியது. பின்னர்  இந்திய விமானங்கள் தவிர மற்ற விமானங்கள் பறக்க அனுமதி அளித்தது. ஜூலை 16-ம் தேதி இந்திய போக்குவரத்து விமானங்கள் பறக்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News