செய்திகள்
ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது- ஈரான் அதிபர்

Published On 2019-08-22 10:10 GMT   |   Update On 2019-08-22 10:10 GMT
அணு ஆயுத ஒப்பந்த விவகாரங்களில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
தெக்ரான்:
 
பாவர் 373 என்ற நீண்ட தூர வகை ஏவுகணை அமைப்பை ஈரான் ராணுவம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி பேசுகையில், “அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது. நமது எதிரிகள் நமது அணுகுமுறைகளை ஏற்கவில்லை. நாமும் அவர்களது அணுகுமுறைக்கு தகுந்தாற்போல்தான் பதிலளிக்க வேண்டும். ஏவுகணைகளைக் கொண்டு அவர்கள் தாக்கும்போது, அந்த  ராக்கெட்டைப் பார்த்து, நாங்கள் அப்பாவிகள் எங்களை கொல்ல வேண்டாம், என நாம் கூறிக்கொண்டிருக்க முடியாது” என்றார்.

இந்த பாவர்- 373 வகை ஏவுகணை ரஷ்யாவின் எஸ்-300 ரக ஏவுகணைகளை விட சக்தி வாய்ந்ததாகும். ஒரே சமயத்தில் 100 இலக்குகளை தாக்கக்கூடியது, அதே நேரத்தில் 6 விதமான ஆயுதங்களோடு போரிடக்கூடியது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணு ஆயுத ஒப்பந்தங்களுக்கு ஈரான் கட்டுப்படவில்லை என்றும், 1992ம் ஆண்டு முதல் ஈரான் உள்நாட்டு பாதுகாப்பு தொழிற்சாலை அமைத்து அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். அத்துடன், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அரசு, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News