செய்திகள்
போலி இன்ஸ்டாகிராம் கணக்குகள்

இன்ஸ்டாகிராமில் உலா வரும் ஒரு கோடி போலி கணக்குகள் -இத்தனை கோடி நஷ்டமா?

Published On 2019-07-16 08:34 GMT   |   Update On 2019-07-16 08:34 GMT
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 வாஷிங்டன்:

இன்ஸ்டாகிராம்  எனும் புகைப்படங்கள் பகிரும் சமூக வலைத்தளப்பக்கம் கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தளத்தினை இந்தியர்கள் பலரும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தளத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை சில இன்ஸ்டாகிராம் கணக்குகள் வழியே கொண்டு சேர்க்கின்றன.

இந்த விற்பனை விளம்பரங்களை அதிக மக்கள் பின் தொடர்கின்றனர். அவ்வாறு மக்கள் பின்பற்றும் கணக்குகளில் ஒரு கோடிக்கும் மேல் போலியானது என தற்போது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 



இது குறித்து ஆன்லைன் நிறுவனம் ஒன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் கணக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அதிக பட்சமாக அமெரிக்காவில் மட்டும் 49 மில்லியன் போலி கணக்குகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்று வருகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக பிரேசிலில் 27 மில்லியன் போலி கணக்குகளும், இந்தியாவில் 16 மில்லியன் அதாவது ஒரு கோடிக்கும் மேல் போலி கணக்குகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த போலி கணக்குகள் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு 750 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.75 கோடி) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் 2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.200 கோடி) அளவிற்கு பரிவர்த்தனைகள் போலி கணக்குகள் மூலமாக அதிகரித்துள்ளதும் அதிர்ச்சி தகவலாக வெளியாகியுள்ளது.





















Tags:    

Similar News