செய்திகள்
நேபாளத்தில் பெய்த கனமழை

நேபாளத்தில் கடும் மழைக்கு 16 பேர் பலி

Published On 2019-07-12 14:37 GMT   |   Update On 2019-07-12 14:49 GMT
நேபாளத்தில் இன்று பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
காத்மண்டு:

நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின்  பல்வேறு பகுதிகள் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

தாழ்வான பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சார வசதியும் தடைபட்டுள்ளது. மழை காரணமாக நாட்டின் பல தேசிய நெடுச்சாலைகள்  துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஒரேநாளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கோட்டாங், போஜ்பூர் மற்றும் முல்பானி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக நேபாளத்தில் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ஆற்றுப்படுகை ஆக்கிரமிப்பு மற்றும் ஆற்று மணல் கடத்தல் போன்றவற்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.  

Tags:    

Similar News