செய்திகள்
மத்திய தரைக்கடல் பகுதி

துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது: 80-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்

Published On 2019-07-05 03:44 GMT   |   Update On 2019-07-05 03:44 GMT
துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என என அஞ்சப்படுகிறது.
ஜெனீவா:

ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் பயணம் செய்து உள்ளனர். அந்த படகில் 80க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். துனிசியா கடற்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்றபோது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.  அதிக எடையால் படகு திடீரென கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நீரில் மூழ்கியவர்களில் 4 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.  எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார்.  இந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியாகி இருக்கக்கூடும் என ஐநா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News