செய்திகள்

இலங்கையின் தற்போதைய நிலைக்கு அதிகார குறைப்பு நடவடிக்கையே காரணம்: சிறிசேனா

Published On 2019-06-24 03:23 GMT   |   Update On 2019-06-24 03:23 GMT
இலங்கையின் தற்போதைய நிலைக்கு அதிபரின் அதிகார குறைப்பு நடவடிக்கையே காரணம் என்று சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பு :

இலங்கை அதிபராக சிறிசேனா 2015-ம் ஆண்டு பதவி ஏற்றார். அதன்பிறகு, அரசியல் சட்டத்தில் 19-வது திருத்தத்தை கொண்டு வந்தார். அதன்படி, அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடனான மோதலால், அவரை நீக்கி விட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் சிறிசேனா நியமித்தார். இதனால், இரண்டு மாதங்களாக குழப்பநிலை நிலவியது.

இந்நிலையில், கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா பேசியதாவது:-

இந்த அரசின் மிகப்பெரிய தவறு, 19-வது திருத்தம். அது, ஸ்திரமற்ற தன்மையை உண்டாக்கி விட்டது. நாம் ஸ்திரமற்ற அரசை நடத்தி வருவதாகவும், நானும், பிரதமரும் ஆளுக்கொரு பக்கம் அரசை இழுத்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதற்கு காரணம் 19-வது திருத்தம்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News