செய்திகள்

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு

Published On 2019-06-16 00:59 GMT   |   Update On 2019-06-16 00:59 GMT
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயலிழக்க வைத்தனர்.
பெர்லின்:

இரண்டாம் உலகப்போர் 1939-1945 ஆண்டுகளில் நடைபெற்றது. அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரில் அமெரிக்கா போட்ட 100 கிலோ எடை கொண்ட ராட்சத வெடிகுண்டு வெடிக்காத நிலையில் அலெக்சாண்டர்பிளாட்ஸ் சதுக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க போலீசார் நேற்று அதிகாலை நேரத்தில் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்காக அந்தப் பகுதியில் வசித்து வந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த வெடிகுண்டை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயலிழக்க வைத்தனர்.

அதிகாலை 1.45 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, எந்த பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News