செய்திகள்

55 அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் உலகிலேயே முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்தில் நீச்சல் குளம்

Published On 2019-06-10 03:13 GMT   |   Update On 2019-06-10 03:13 GMT
லண்டனில் 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் புதிய தொழில்நுட்பத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
லண்டன்:

லண்டனில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் உலகிலேயே முதன் பிரமிப்பூட்டும் வகையில் 360 டிகிரி கோணத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த மாடியின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தின் நான்குப்புற சுவர்களும் கண்ணாடியால் ஆனதாகும். அதிக உயரத்தில் இருந்தபடி லண்டனின் அழகை ரசித்துக் கொண்டே குளிப்பதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும் நெட்டிசன்கள், புகைப்படங்களை வேகமாக பகிர்ந்ததுடன் இதனுள் செல்வது எப்படி என்பதைதான் கேட்டு வருகின்றனர். இந்த கேள்வி குறித்த தகவல் அறிந்த, நீச்சல் குளத்தினை வடிவமைத்த கேம்பஸ் நீச்சல் குளம் கட்டமைப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆலன் கேன்சலே பதில் அளித்தார்.



நீச்சல் குளத்தின் கீழே சுழலும் படிக்கட்டுகள் உள்ளன. இவை நீச்சல் குளத்தின் அடிப்பகுதியில் இருந்து மக்களை கொண்டு செல்லும் எனவும், குளத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்களும் ஒரு பட்டனை அழுத்தினால், அந்த படிக்கட்டுகள் மீண்டும் வந்து அழைத்துச் செல்லும் எனவும் ஆலன் கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பார்ப்பவர்களை பிரமிப்படையவும் செய்துள்ளது. 
Tags:    

Similar News