செய்திகள்

1300 கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான்

Published On 2018-10-08 15:02 GMT   |   Update On 2018-10-08 15:02 GMT
அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன கவுரி ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. #Pakistantestfires
இஸ்லாமாபாத்:

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் தனது ஆயுத பலத்தை அதிகரிப்பதில் தொடர்ந்து ஆர்வமும் அக்கறையும் காட்டி வருகிறது. உள்நாட்டு தயாரிப்பான பயங்கர போர் ஆயுதங்களுடன் சுமார் 700 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் ‘பாபர்’ ஏவுகணையை கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பரிசோதித்தது.

அவ்வரிசையில், பயங்கர போர் ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன ’கவுரி’ ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இன்றைய ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததற்கு பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பாராட்டு தெரிவித்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Pakistantestfires  #Ghauriballisticmissile #DrArifAlvi #ImranKhan
Tags:    

Similar News