செய்திகள்

முதன் முதலாக சவுதிஅரேபியாவில் வங்கியின் தலைவராக பெண் தேர்வு

Published On 2018-10-07 06:43 GMT   |   Update On 2018-10-07 06:43 GMT
சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா, அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார். #LubnaAlOlayan
ஜெட்டா:

சவுதி அரேபியாவில் இயங்கும் சவுதி பிரிட்டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கியும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வங்கி 17.2 பில்லியன் அமெரிக்க டாலர் (12,560 கோடி) மதிப்புடன் நாட்டின் மிகப்பெரிய 3-வது வங்கியாக உருவெடுத்துள்ளது.

இந்த புதிய வங்கியின் தலைவராக சவுதி அரேபியாவின் பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா, அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக பழமை வாதத்தை காலம் காலமாக கடை பிடித்து வரும் சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவை நவீனமயமாக்கும் முயற்சியில் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஈடுபட்டுள்ளார். சவுதி வி‌ஷன் 2030 என்ற திட்டத்தின்படி அங்கு வாழும் பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.

புதிய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லுப்னா அல் ஓலயன் அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தார். போர்பஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018-ம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருந்தார்.

தங்களது குடும்பத்தினர் நடத்திவரும் தொழில் குழுமத்துக்கு தலைமை வகித்து வருகிறார். சவுதி அரேபியாவின் நிதி துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். #LubnaAlOlayan
Tags:    

Similar News