செய்திகள்

700 சதுர மீட்டரில் 1,155 கிலோ அரிசி விளைவித்து சீனா புதிய உலக சாதனை

Published On 2018-09-04 15:32 GMT   |   Update On 2018-09-04 15:32 GMT
700 சதுர மீட்டர் விவசாய நிலத்தில் 1,155 கிலோ உயர் விளைச்சல் (ஹைபிரீட்) ரக அரிசி விளைவித்ததன் மூலம் சீனா புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது. #Chinariceoutput
பீஜிங்:

சீனாவின் விவசாயத்துறை பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் உயர் விளைச்சல் (ஹைபிரீட்) ரக அரிசியை பயிரிட்டு அதிக மகசூலை பெறும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக கடந்த 2009-ம் ஆண்டில் யுன்னான் மாகாணத்தில் உள்ள கேஜியு பகுதியில் மூன்று நிலங்களை தேர்வு செய்து, பண்படுத்தி அங்கு தொடர்ந்து ஆராய்ச்சி செய்தனர்.

ஆண்டுதோறும் நிலையான, மிதமான மழை, பனிப்பொழிவு மற்றும் சரிசமமான சதுப்பு நிலப்பகுதியான இந்த பகுதி கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.


இந்த நிலத்தில் சோதனை முயற்சியாக 0.07 ஹெக்டேர் (700 சதுர மீட்டர் அல்லது சுமார் 7,534 சதுரடி) கொண்ட வயலில் விதைத்த ஹைபிரீட் ரக நெற்பயிர் தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில் 1,152.3 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. அரிசி விளைச்சலில் இது புதிய உலக சாதனை என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #riceoutputworldrecord #Chinasuperhybridrice #Chinariceoutput
Tags:    

Similar News