செய்திகள்

சைப்ரஸ் : அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி

Published On 2018-07-18 19:23 GMT   |   Update On 2018-07-18 19:23 GMT
சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிகோசியா :

ஈராக், சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான படகு பயணத்தின் மூலம் அகதிகளாக மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைவது தொடர்கதையாக உள்ளது. 

இவ்வாறான பயணத்தின்போது அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் காரணத்தினால் பல நேரங்களில் நடுக்கடலில் படகு விபத்துகள் ஏற்படுகிறது. 

இந்நிலையில், சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 பேருடன் பயணித்த படகு மூழ்கியதில் 19 பேர் பலியாகியுள்ளனர். 103 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

உயிரழந்தவர்களின் உடல்கள் துருக்கியின் மெர்சின் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விபத்தில் சிக்கிய அகதிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News