செய்திகள்

மருந்தில் வி‌ஷத்தை கலந்து 20 நோயாளிகளை கொன்ற நர்சு

Published On 2018-07-12 05:20 GMT   |   Update On 2018-07-12 05:20 GMT
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் பணியாற்றிய நர்சு மருந்தில் விஷத்தை கலந்து இதுவரை 20 நோயாளிகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ:

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).

இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.

அவர் நர்சாக பணியாற்றிய போது, 88 வயது முதியவர் ஒருவருக்கு குளுக்கோசில் வி‌ஷத்தை கலந்து செலுத்தி அவரை கொன்றது தெரிய வந்தது.


இது சம்பந்தமாக போலீசார் அவரிடம் விசாரித்தார்கள். அது உண்மை என்று தெரிய வந்தது. மேலும் விசாரித்ததில் அவர் இதுவரை 20 நோயாளிகளை இவ்வாறு மருந்தில் வி‌ஷம் கலந்து கொன்றதாக கூறினார்.

அதிகம் தொல்லை கொடுக்கும் நோயாளிகளை இவ்வாறு கொன்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News