செய்திகள்

இந்தியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது அமெரிக்கா

Published On 2018-06-27 23:20 GMT   |   Update On 2018-06-27 23:20 GMT
அமெரிக்காவுடன் உறவை மேம்படுத்த ஜூலை 6 ஆம் தேதி நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை அமெரிக்க ஒத்திவைத்துள்ளது. #US #India #2plus2dialogue

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த முறை அமெரிக்காவுக்கு சென்றபோது இரு நாடுகள் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 6-ம் தேதி இந்தியா - அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கெல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டது.

அப்போது, பாதுகாப்புத்துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது, உலகளாவிய மற்றும் பிராந்திய நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், இந்த சந்திப்பை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது பற்றி அமெரிக்க தெரிவிக்கவில்லை. #US #India #2plus2dialogue
Tags:    

Similar News