செய்திகள்

ரமலான் மாதத்தை முன்னிட்டு காசா எல்லை திறக்கப்படுவதாக எகிப்து அறிவிப்பு

Published On 2018-05-18 06:41 GMT   |   Update On 2018-05-18 06:41 GMT
சினாய் பகுதியில் நடந்த தாக்குதலை அடுத்து நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கும் காசா எல்லைப்பகுதியை ரமலான் மாதம் முழுவதும் திறந்து வைக்க எகிப்து பிரதமர் அல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.#Gaza #Ramadan
கெய்ரோ:

எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமலான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காசா எல்லையில் உள்ள சகோதரர்களின் சுமையை குறைக்கவே இந்த முடிவு எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், காசா எல்லைப்பகுதி திறக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு எப்போதும் மூடப்பட்டிருக்கும் காசா எல்லை, 1 மாத காலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Gaza #Ramadan
Tags:    

Similar News