செய்திகள்

உலகில் முதன்முறையாக அமெரிக்க ராணுவ வீரருக்கு ஆணுறுப்பு மாற்று ஆபரேசன்

Published On 2018-04-24 06:05 GMT   |   Update On 2018-04-24 06:05 GMT
குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க ராணுவ வீரருக்கு முதன் முறையாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நியூயார்க்:

அமெரிக்காவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் அடி வயிறு பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அதற்காக அவர் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மேற்கொண்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆணுறுப்பு மற்றும் விரைப்பையை மாற்று ஆபரேசன் மூலம் பொருத்தி செயல்பட செய்ய முடியும் என்றனர். அதை தொடர்ந்து அவருக்கு மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக பெற்று டாக்டர்கள் பொருத்தினர்.

இந்த ஆபரேசனை 11 டாக்டர்கள் அடங்கிய குழு 14 மணிநேரம் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தற்போது ராணுவ வீரர் தான் வழக்கம்போல் செயல்படுவதாக கூறினார். #USSolider
Tags:    

Similar News