செய்திகள்

அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்

Published On 2018-03-20 07:38 GMT   |   Update On 2018-03-20 07:38 GMT
அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என ஆராய்ச்சியாளர் கயே சூன் கிம் தெரிவித்துள்ளார்.
சியோல்:

சர்வதேச அளவில் உடல் பருமன் நோய் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த ஆய்வில் அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது உடல் குண்டாகி விடுவதாக ஆய்வில் தெரியவந்தது.

எனவே உடல் பருமன் நோயை தடுக்க கூடிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

அதன்மூலம் குழந்தை பருவத்திலேயே அவர்கள் உடல் பருமனை தடுக்க முடியும் என கண்டறியப்பட்டது. அதிக எடையுடன் குழந்தை பிறப்புக்கும், உடல் பருமன் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.


அதை தடுக்கும் சிறந்த மருந்தாக தாய்ப்பால் திகழ்கிறது. எனவே அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என ஆராய்ச்சியாளர் கயே சூன் கிம் தெரிவித்துள்ளார்.

இவர் சியோலில் உள்ள ஈவ்கா பெண்கள் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார். #Tamilnews
Tags:    

Similar News