செய்திகள்

மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி - டிரம்ப் யோசனை

Published On 2018-02-22 07:17 GMT   |   Update On 2018-02-22 07:17 GMT
பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காமல் இருக்க இனி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #FloridaSchoolShooting #DonaldTrump
வாஷிங்டன்:

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி நடமாட்டத்தை கட்டுபடுத்துவது தொடர்பாக டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சாதாரண தானியங்கி துப்பாக்கியை எந்திர துப்பாக்கியாக மாற்றக்கூடிய பம்ப்ஸ்டாக் என்ற கருவியை பயன்படுத்த டிரம்ப் தடை விதித்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளி துப்பாக்கி சூடு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார். அதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்களிடம் பேசிய டிரம்ப் பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காமல் இருக்க இனி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் இனி துப்பாக்கி வாங்குபவர்கள் பின்னணி பற்றியும் தீவிரமாக விசாரிக்கப்படும். அவர்களுடைய மனநிலைப் பள்ளி ஆய்வு செய்யப்படும் என்றும் அவர்களிடம் டிரம்ப் கூறினார்.

அப்போது ஒரு மாணவரின் பெற்றோர் நீங்கள் தேர்தல் பிரசாரத்தின்போது, துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக பேசியதாக குற்றம் சாட்டினார். அதற்கு டிரம்ப் நான் அவ்வாறு ஆதரவாக செயல்படவில்லை என்று கூறினார்.

மற்றொரு மாணவரின் பெற்றோர் துப்பாக்கி சூடு நடப்பதை தடுக்க உரிய சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று கூறினார். அதற்கு இதுபற்றி ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி அளித்தார். #FloridaSchoolShooting #floridahighschoolshooting #FloridaShooting #Florida #DonaldTrump #Trump
Tags:    

Similar News