செய்திகள்

இலங்கை பத்திரிக்கை ஆசிரியர் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. கைது

Published On 2018-02-14 10:35 GMT   |   Update On 2018-02-14 10:35 GMT
இலங்கை பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி.யை இலங்கை போலீசார் இன்று கைது செய்தனர்.
கொழும்பு:

இலங்கையில் 'சண்டே லீடர்' என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த லசந்த விக்ரமதுங்க கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவர் அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் ராஜபக்சே குறித்து விமர்சித்த ஒரே பத்திரிக்கையாளர். அவரது மரணத்திற்கு ராஜபக்சே அரசு தான் காரணம் என கூறப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் முன்னாள் டி.ஐ.ஜி. பிரசன்னா நாணயக்காரை இலங்கை போலீசார் இன்று கைது செய்தனர். இவர் விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது மேற்கு மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் இந்த வழக்கில் கைது செய்யப்படும் இரண்டாவது அதிகாரி ஆவர். இதற்கு முன் கடந்த 3-ம் தேதி முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறிசேனா அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
 
Tags:    

Similar News