செய்திகள்

‘அந்தாளு கிட்ட வேலை செய்ய முடியாது’: டிரம்ப் மீது அதிருப்தி கொண்ட அமெரிக்க தூதர் ராஜினாமா

Published On 2018-01-13 09:48 GMT   |   Update On 2018-01-13 09:48 GMT
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவதைவிட கவுரவத்துக்காக பதவியை ராஜினாமா செய்ய பனாமா நாட்டுக்கான அமெரிக்க தூதர் முன்வந்துள்ளார்.
வாஷிங்டன்:

மத்திய அமெரிக்கா - தென் அமெரிக்கா இடையே பனாமா கால்வாயின் ஓரத்தில் அமைந்துள்ள பனாமா நாட்டின் அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தவர், ஜான் ஃபீலே. கடந்த டிசம்பர் மாதம் இவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்க கடற்படையில் ஹெலிகாப்டர் ஓட்டுனராக முன்னர் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜான் ஃபீலே, தற்போதையை அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு கீழே பணியாற்ற முடியாது என்பதால் கவுரவத்தின் உந்துதலால் பனாமா நாட்டுக்கான தனது தூதர் பதவியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘அயல்நாட்டு சேவை பிரிவின் இளநிலை அதிகாரியான நான், ஒருசார்பின்றியும், சில கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அமெரிக்க அதிபர் மற்றும் அவரது நிர்வாகத்துக்கு நேர்மையாக பணியாற்றுவேன் என்னும் உறுதிமொழி மேற்கொண்டு இந்த பணியில் சேர்ந்தேன்.

அந்த உறுதிமொழியின்மீது என்னால் செயலாற்ற இயலவில்லை என்றால் கவுரவம் கருதி ராஜினாமா செய்வது நல்லது என்ற காலகட்டத்துக்கு நான் தள்ளப்ப0,,0ட்டேன். அதற்கான நேரம் வந்து விட்டது’ என தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தின்மீது அதிருப்தி கொண்டு பதவியை ராஜினாமா செய்யும் இரண்டாவது அமெரிக்க தூதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சோமாலியா நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் நைரோபி நாட்டு விவகாரங்களை கவனித்துவந்த எலிசபெத் ஷேக்கல்ஃபோர்ட் என்ற பெண் அதிகாரி சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். 



மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்னும் கொள்கையை தற்போதைய அமெரிக்க நிர்வாகம் கைவிட்டு விட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார். #tamilnews

Tags:    

Similar News