செய்திகள்

கத்தரிக்காயை வெடிகுண்டு என நினைத்து முதியவர் செய்த போனால் பரபரப்பு

Published On 2017-11-04 09:47 GMT   |   Update On 2017-11-04 09:47 GMT
ஜெர்மனியில் வீட்டின் பின்புறம் கிடந்த பெரிய கத்தரிக்காயை வெடிகுண்டு என எண்ணி போலீசுக்கு முதியவர் ஒருவர் தொலைபேசியில் தகவல் அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
பெர்லின்:

ஜெர்மனியில் உள்ள கார்ல்சூ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய 81 வயது முதியவர் தன் வீட்டின் பின்புறம் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கிடப்பதாக கூறியுள்ளார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து அவர் வீட்டிற்கு சென்றனர்.



வீட்டின் பின்புறம் சோதனை செய்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அங்கு 40 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்காய் கிடந்துள்ளது. அதனை வெடிகுண்டு என எண்ணி போலீசாருக்கு போன் செய்துள்ளார்.



கத்தரிக்காயை யாரோ அடையாளம் தெரியாத நபர் அவர் வீட்டில் போட்டுள்ளார். அதனால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. சோதனை செய்த பின்னர் போலீசார் கத்தரிக்காயை அப்புறப்படுத்தினர்.

இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் ஜெர்மனியில்  அடிக்கடி கண்டெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News