செய்திகள்

பாதுகாப்பை மீறி ஊடுருவ முயன்ற மர்மநபர் - வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது

Published On 2017-11-03 16:06 GMT   |   Update On 2017-11-03 16:06 GMT
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் வடக்கு பகுதியில் உள்ள வேலியை உடைத்து ஊடுருவ முயன்ற மர்மநபரால் வெள்ளை மாளிகை சிறிது நேரத்திற்கு மூடப்பட்டது.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக வெள்ளை மாளிகையில் இருந்து கிளம்பி தலைநகர் வாஷிங்டன் சென்று அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச்சென்றார்.

டிரம்ப் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் வெள்ளை மாளிகையின் வடக்குப்பகுதியில் உள்ள வேலி அருகே மர்மநபர் ஒருவர் சந்தேகப்படும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதை கன்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த உளவுத்துறை அதிகாரிகள் கவனித்து விட்டனர். அவர்களில் சிலர் உடனடியாக ஓடிச் சென்று அந்த மர்மநபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள அனைத்து நுழைவு வாயில்களும் உடனடியாக மூடப்பட்டன.

வெள்ளை மாளிகைக்குள் பணியாளர்கள் மற்றும் ஊடகத்தினர் யாரும் நுழைய அனுமதி அளிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
Tags:    

Similar News