செய்திகள்

உலகம் முழுவதும் 110 கோடி பேர் கண் பார்வை இன்றி தவிப்பு

Published On 2017-10-23 05:28 GMT   |   Update On 2017-10-23 05:28 GMT
உலக வங்கியின் ‘வளர்ச்சி திட்டங்களை கண்டறிதல்’ அமைப்பு சார்பில் சர்வதேச நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 110 கோடி பேர் கண் பார்வை இன்றி அவதிப்படுவதும் அடையாளம் இன்றி தவிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

உலக வங்கியின் ‘வளர்ச்சி திட்டங்களை கண்டறிதல்’ அமைப்பு சமீபத்தில் சர்வதேச நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது.

அப்போது 110 கோடி பேர் கண் பார்வை இன்றி அவதிப்படுவதும் அடையாளம் இன்றி தவிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு உலக மக்களில் பெரும்பாலானோருக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அறிவு இல்லாததே காரணமாக கருதப்படுகிறது.

கண் பார்வையற்றவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் உள்ளனர். பார்வையற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் குழந்தைகள் ஆவர்.

இங்குள்ள பெரும்பாலான நாடுகளில் வறுமை, வன்முறை, ஆயுத கலாசாரம் மற்றும் வளர்ச்சியின்மை நிலவுகிறது. இப்பிரச்சனைகளால் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் போதுமான சத்துணவு கிடைப்பதில்லை. அதனால் குழந்தைகளும், பெரியவர்களும் பார்வை இழக்கின்றனர்.

சீனா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்வதில்லை. இதனால் குழந்தைகளின் உடல்நலம் குறித்த முழு தகவலும் அறிய முடிவதில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News