செய்திகள்

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடரும் கனமழை - கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

Published On 2017-08-22 21:44 GMT   |   Update On 2017-08-22 21:44 GMT
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோனாக்ரி:

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளான செனகல், செய்ரோ லியோன், கினியா ஆகிய நாடுகளில் கனமழை பெய்து வருகின்றது. செய்ரோ லியோன் நாட்டில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கினியா நாட்டில் கொனாக்ரி நகரில் கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 8 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலபேர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்படுள்ளதாகவும், நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News