செய்திகள்

ஸ்பெயின்: பாதசாரிகள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி - தீவிரவாத தாக்குதலா? என போலீஸ் விசாரணை

Published On 2017-08-17 17:48 GMT   |   Update On 2017-08-17 17:48 GMT
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் சாலையை கடந்த பாதசாரிகள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியான நிலையில், இது தீவிரவாத தாக்குதலாக கருதுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாட்ரிட்:

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் சாலையை கடந்த பாதசாரிகள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியான நிலையில், இது தீவிரவாத தாக்குதலாக கருதுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே
பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த கார் பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. இதனால், அங்கு கடும் பதற்றமான நிலை நிலவியது.

இந்த தாக்குதலில் 3 பொதுமக்கள் பலியானதாகவும், 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மக்கள் மீது வாகனத்தை செலுத்திவிட்டு வேனின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தின் முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று போலீஸ் குறிப்பிட்டதாக பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் பார்சிலோனாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News