செய்திகள்

சீனா: நிலநடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்

Published On 2017-08-09 03:43 GMT   |   Update On 2017-08-09 04:21 GMT
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகிருக்கலாம் என அரசு அச்சம் தெரிவித்திருந்த நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீஜிங்:

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. குவாங்கியான் நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள ஜியுஜாய்கோவ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 6 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்களில் உள்ள டைல்கள் உடைந்து விழுந்தன.

சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் 100 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக சீன அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், 13 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008-ம்

ஆண்டில் இதே மாகாணத்தில் நிலநடுக்கத்தில் சிக்கி 70 ஆயிரம் பேர் வரை பலியாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News