செய்திகள்

நடைபயிற்சியின்போது ஏற்பட்ட பாசத்தால் நாயை தத்தெடுத்த ராணி எலிசபெத்

Published On 2017-07-21 05:43 GMT   |   Update On 2017-07-21 05:43 GMT
நடைபயிற்சியின்போது ஏற்பட்ட பாசத்தால் நாயை தத்தெடுத்து இங்கிலாந்து ராணி எலிசபெத் பராமரித்து வருகிறார்.

லண்டன்:

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு நாய்களின் மீது பிரியம் அதிகம். எனவே அவர் 3 நாய்களை வளர்க்கிறார். அந்த நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வார்.

அப்போது முன்னாள் விளையாட்டு வீரர் பில் பென்விக் என்பவரும் தனது விஸ்பா என்ற கார்ஜி இன நாயுடன் நடைபயிற்சி செய்து வருவார். அந்த நாயின் மீது ராணி எலிசபெத் பாசம் வைத்தார்.

இந்த நிலையில் திடீரென விளையாட்டு வீரர் பில் பென்விக் உடல் நலம் குன்றினார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். எனவே அந்த நாயை ராணி எலிசபெத்தே நடைபயிற்சி அழைத்து சென்றார்.

இதற்கிடையே பில் பென்விக் மரணம் அடைந்தார். அதன் பின்னர் அந்த நாயை ராணி எலிசபெத் தத்தெடுத்து பராமரித்து வருகிறார்.

Tags:    

Similar News