செய்திகள்

ஜெர்மனியில் தாய்லாந்து மன்னர் மீது பொம்மை துப்பாக்கி சூடு

Published On 2017-06-23 07:04 GMT   |   Update On 2017-06-23 07:04 GMT
ஜெர்மனியில் தாய்லாந்து மன்னர் மீது பொம்மை துப்பாக்கி குண்டு பாய்ந்து. இச்சம்பவம் குறித்து ஜெர்மனி போலீசாரும் உஷாராகி அப்பகுதியில் சிறுவர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

முனிச்:

தாய்லாந்து மன்னர் மகாவஜிராங்கார்ன் (64). இவரது தந்தை பூமிபால் அதுல்யதேஜ் கடந்த அக்டோபரில் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து இவர் புதிய மன்னராகி இருக்கிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது ஜெர்மனியில் முகாமிட்டு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார். இவர் முனிச் நகரில் லேக் ஸடெர்ன் பெர்க்கில் தங்கியுள்ளார்.

சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் அந்நகரை வலம் வந்தார். அப்போது அவரது பாதுகாவலர்களும் உடன் வந்தனர். அப்போது திடீரென அவரை பிளாஸ் டிக் துப்பாக்கி குண்டு பாய்ந்து தாக்கியது.

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது பாதுகாவலர்கள் பரபரப்பாகினர். இதற்கிடையே ஜெர்மனி போலீசாரும் உஷாராகி அப்பகுதியில் இருந்த 13 மற்றும் 14 வயது சிறுவர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தந்தையுடன் ரோட்டில் சென்று கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டு துப்பாக்கியால் சுட்டதில் மன்னர் மீது குண்டு பாய்ந்தது தெரிய வந்தது.

இச்சம்பவத்தில் மன்னர் வஜிராங்கார்ன் காயமின்றி தப்பினார். இருந்தும் அந்த சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News