செய்திகள்

பாகிஸ்தான் பிரதமருக்கு குல்பூஷண் ஜாதவின் காலணி மாலை அணிவிப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு

Published On 2017-05-21 00:16 GMT   |   Update On 2017-05-21 00:16 GMT
குல்பூஷண் ஜாதவின் காலணி கொண்டு உருவாக்கப்பட்ட மாலையை பாகிஸ்தான் பிரதமரின் கழுத்தில் அணிவிப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என முஸ்லிம் மதகுருவான சையத் ஷா அதெப் அலி அல் குவாத்ரி அறிவித்துள்ளார்.
கொல்கத்தா:

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவுக்கு, அந்த நாட்டு ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா மேற்கொண்ட முறையீட்டின் பேரில் அவரது தண்டனைக்கு சர்வதேச கோர்ட்டு தடை விதித்தது.

இந்தநிலையில் ஜாதவுக்கு மரண தண்டனை அளித்ததற்கு கொல்கத்தாவை சேர்ந்த முஸ்லிம் மதகுருவான சையத் ஷா அதெப் அலி அல் குவாத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் மொத்தமாக தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.

வெறும் அற்பத்தனமான ஒரு வழக்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டிய அவர், ஜாதவின் காலணி கொண்டு உருவாக்கப்பட்ட மாலையை பாகிஸ்தான் பிரதமரின் கழுத்தில் அணிவித்து, அவரை இந்தியா முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு காலக்கெடு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். 
Tags:    

Similar News