செய்திகள்

மியான்மர் அகதிகள் உள்பட 30 வெளிநாட்டவர்களுடன் சென்ற இந்திய படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

Published On 2017-04-30 15:02 GMT   |   Update On 2017-04-30 15:02 GMT
மியான்மர் அகதிகள் உள்பட 30 வெளிநாட்டவர்களுடன் சென்ற இந்திய படகை இலங்கை கடற்படை வீரர்கள் வழிமறித்து பறிமுதல் செய்தனர்.
கொழும்பு:

இலங்கை கடற்படை வீரர்கள் வடக்கு ஜாஃப்னா பெனின்சுலாவில் உள்ள காங்கேசந்துரை கடற்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த படகு ஒன்று சென்று கொண்டிருப்பதாக தெரியவந்தது.

அந்த படகில் ஏராளமானோர் பயணம் செய்வது தெரியவந்தது. உடனே இலங்கை கடற்படையினர் அந்த படகை பறிமுதல் செய்தனர். அப்போது மியான்மர் நாட்டைச் சேர்ந்த 30 பேர் உள்பட 32 வெளிநாட்டவர்கள் இருந்ததை கண்டு பிடித்தனர். அவர்களை கைது செய்ததுடன், படகையும் பறிமுதல் செய்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மியான்மரில் நடைபெற்ற மோதல் காரணமாக இந்தியாவிற்குள் அகதிகளாக வந்தவர்களை, படகில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News