செய்திகள்

இந்தியாவுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்த இலங்கை ஆர்வமாக உள்ளது: விக்ரமசிங்கே

Published On 2017-04-22 15:08 GMT   |   Update On 2017-04-22 15:08 GMT
இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்த இலங்கை ஆர்வமாக இருப்பதாக பிரதமர் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பு:

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 5 நாள் சுற்றுப் பயணமாக வரும் 25-ம் தேதி இந்தியா வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேசுகிறார்.

இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கண்டியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, “இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்திய பயணத்தின்போது திரிகாணமலை மாவட்ட வளர்ச்சி தொடர்பாக பேசப்படும். திரிகோணமலையில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது ஜப்பானுடன் இணைந்த ஒரு கூட்டு முயற்சியாகும்” என்றார்.


மேலும், இந்தியா-இலங்கை இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் இழுபறியில் உள்ளது. இதுபற்றியும் இந்த சுற்றுப்பயணத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ரணில் விக்ரமசிங்கே இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Similar News