செய்திகள்

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு குற்றம்: இந்திய மருத்துவரை தொடர்ந்து மேலும் இருவர் கைது

Published On 2017-04-21 18:21 GMT   |   Update On 2017-04-21 18:21 GMT
அமெரிக்காவில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு குற்றத்தில், இந்திய மருத்துவருக்கு உதவி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூயார்க்:

பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பு சிதைப்பு குற்றத்திற்காக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு உதவி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் ஜுமானா நகர்வாலா (44). அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள பிறப்புறுப்பை சிதைப்பு குற்றத்திற்காக கடந்த ஏப்ரல் 12-ல் கைது செய்யப்பட்டார். அதுவும் 6 முதல் 8 வயதான 2 பெண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பை சிதைத்துள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.



இந்நிலையில், நகர்வாலாவுக்கு உதவி செய்ததாக லிவோனியா நகர மருத்துவர் பக்ருதீன் அட்டார் மற்றும் அவரது மனைவி பரிதா அட்டார் லிவோனியா நகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லிவோனியாவில் மருத்துவமனை நடத்தி வரும் அட்டார், மருத்தவமனை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த குற்றத்தை செய்து வந்துள்ளதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களின் பிறப்புறுப்பை சிதைப்பது குற்றம் என 1996-ல் அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், நகர்வாலா மற்றும் அவருக்கு உதவி செய்தவர்களுக்கு அமெரிக்க விதிகளின் படி அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Similar News