செய்திகள்

அமெரிக்காவில் 3 பேர் சுட்டுக்கொலை: இனவெறியில் ஆப்பிரிக்கர் தாக்குதல்

Published On 2017-04-19 05:11 GMT   |   Update On 2017-04-19 08:52 GMT
அமெரிக்காவில் இனவெறியில் 3 பேரை ஆப்பரிக்கர் சுட்டுக் கொன்றார். கடந்த வாரம் இப்பகுதியில் நெடுஞ்சாலை ஓட்டலில் துப்பாக்கி சூடு நடந்தது. அதில் முக்கிய குற்றவாளியும் இவர்தான்.

கலிபோர்னியா:

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள பிரெஸ்னோவை சேர்ந்தவர் கோரி அலி முகமது (39).

இவரை ‘பிளாக் ஷீசஸ்’ என்றம் அழைப்பார்கள். இவர் அமெரிக்க வாழ் ஆப்பரிக்கர் ஆவார்.

நேற்று காலை 10.45 மணியளவில் பிரெஸ்னோவில் கத்தோலிக்க அறக்கட்டளை தலைமை அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார்.

கையில் காலிபர்ரக கைத் துப்பாக்கி வைத்திருந்தார். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனியார் நிறுவன வாகனங்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார் சுமார்16 ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினார்.

அதில் 3 பேர் துப்பாக்கி குண்டகள் பாய்ந்து அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாயினர். ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூடு நடந்தததால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து கோரி அலி முகமதுவை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை அழைத்து சென்று தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இனவெறி தாக்குதலில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றதாக தெரிவித்தார்.அவருக்கு வெள்ளைக்காரர்களை கண்டால் பிடிக்காது. அது குறித்து ஏற்கனவே ‘பேஸ்புக்’கில் இவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகவலை விசாரணை நடத்திய போலீஸ் தலைமை அதிகாரி ஜெர்ரி டயர் தெரிவித்தார். கடந்த வாரம் இப்பகுதியில் நெடுஞ்சாலை ஓட்டலில் துப்பாக்கி சூடு நடந்தது. அதில் முக்கிய குற்றவாளியும் இவர்தான். இவரை போலீசார் தேடி வந்தனர். என்றும் அதிகாரி ஜெர்ரி டயர் கூறினார்.

Similar News