செய்திகள்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து அதிபருக்கு மிக நெருக்கமானவர் நீக்கம்

Published On 2017-04-06 00:52 GMT   |   Update On 2017-04-06 00:52 GMT
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து தனக்கு மிக நெருக்கமானவராக இருந்த ஸ்டீவ் பேனனை நீக்கி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து தனக்கு மிக நெருக்கமானவராக இருந்த ஸ்டீவ் பேனனை நீக்கி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம் பதவியேற்றதும், தனக்கு மிக நெருக்கமானவராக இருந்த ஸ்டீவ் பேனனை தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறச் செய்தார். இந்நிலையில், திடீரென அந்தப் பொறுப்பில் இருந்து பேனனை அதிபர் டொனால்டு டிரம்ப் நீக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேலும், அரசின் உயர்நிலை கூட்டங்களை நடத்துவதற்கான அதிகாரத்தை பேனனுக்கு டிரம்ப் அளித்திருந்தார். இந்நிலையில், மேற்கண்ட முடிவை டிரம்ப் மாற்றிக் கொண்டு, தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து பேனனை நீக்கியுள்ளார். புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர் ஆலோசனையை ஏற்று டிரம்ப் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா.வுக்கான அமெரிக்க அரசின் பிரதிநிதி நிக்கி ஹாலே மற்றும் எரிசக்தி துறை செயலர் ரிக் பெர்ரி ஆகியோர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Similar News