செய்திகள்

இந்திய ராணுவ தளபதிக்கு நேபாள கெளரவ ஜெனரல் விருது: ஜனாதிபதி பித்யா தேவி வழங்கினார்

Published On 2017-03-29 18:19 GMT   |   Update On 2017-03-29 18:19 GMT
நேபாளத்தின் மிக உயரிய விருதான ‘கெளரவ ஜெனரல்’ பட்டத்தினை இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி வழங்கினார்.
காத்மண்டு:

நேபாள அரசின் அழைப்பை ஏற்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் 4 நாள் பயணமாக நேபாள தலைநகர் காத்மண்டு சென்றுள்ளார். தலைநகர் காத்மண்டுவில் பிபின் ராவத்துக்கு அந்நாட்டு ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபா வரவேற்பு அளித்தார்.

இந்நிலையில், நேபாளத்தின் மிக உயரிய விருதான ‘கெளரவ ஜெனரல்’ பட்டம் பிபின் ராவத்துக்கு இன்று வழங்கப்பட்டது. அந்நாட்டு ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இந்த பட்டத்தினை வழங்கினார்.

இந்தியா-நேபாள ராணுவ நல்லுறவுக்கு சாட்சியாக இப்பட்டம் இருதரப்பினருக்கும் இருநாட்டு ராணுவத்தால் வழங்கப்படுவது மரபு. 1950 முதல் இந்த மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அதிபர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நேபாள ராணுவ தளபதி ராஜேந்திர செஹித்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News