செய்திகள்

எகிப்து: சூனியக்காரர்கள் என்று குற்றம்சாட்டி இருவரின் தலைகளை துண்டித்துக் கொன்ற ஐ,எஸ். தீவிரவாதிகள்

Published On 2017-03-29 10:41 GMT   |   Update On 2017-03-29 10:41 GMT
எகிப்து சினாய் தீபகற்பத்தில் சூனியக்காரர்கள் என்று குற்றம்சாட்டி இருவரின் தலைகளை துண்டித்துக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் பில்லி, சூனியம் வைப்பதாக குற்றம்சாட்டி இருவரின் தலைகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் துண்டித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெய்ரோ:

இஸ்ரேல், காசா முனை பகுதியையொட்டி சூயஸ் கனவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள எகிப்து நாட்டுக்கு சொந்தமான எல்லையான சினாய் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஷரியா நீதிமன்றம் என்ற அமைப்பை உருவாக்கி இப்பகுதியின் சட்டம்-ஒழுங்கை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர்கள் இஸ்லாமிய சட்டதிட்டத்தை மீறியதாக பலரை கைது செய்து தண்டித்தும் வருகின்றனர்.

அவ்வகையில், பில்லி, சூனியம் வைப்பதாக குற்றம்சாட்டி இருவரின் தலைகளை ஐ,எஸ். தீவிரவாதிகள் துடிதுடிக்க வெட்டிக் கொன்ற வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிரசார பிரிவினர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் பாலைவனப் பகுதியில் ஆரஞ்சு நிற சீருடை அணிவிக்கப்பட்டுள்ள இருவர் ஒரு கருப்பு வேனில் இருந்து கீழே இறக்கப்படுகின்றனர்.

கோப்பு படம்.

இஸ்லாமிய நெறிமுறைகளை மீறிய வகையில் பில்லி, சூனியம் வைப்பதாக மக்களை மூடநம்பிக்கையின் பக்கம் திசை திருப்பிய இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்குமாறு உத்தரவிடுகிறேன் என ஷரியா கோர்ட் நீதிபதி அளித்த தீர்ப்பின் நகலைஒரு தீவிரவாதி வாசிக்கிறான்.

பின்னர், அவர்கள் இருவரும் கூர்மையான வாள்களால் தலையை துண்டித்துக் கொல்லப்படுகின்றனர். தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிவரும் இந்த பரபரப்பு வீடியோ இளகிய மனம் படைத்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Similar News