செய்திகள்

லண்டன் தீவிரவாத தாக்குதலை ‘செல்பி’ எடுத்தவருக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்

Published On 2017-03-23 11:55 GMT   |   Update On 2017-03-23 11:55 GMT
லண்டன் பாராளுமன்றம் அருகே நடந்த தீவிரவாத தாக்குதலை செல்பி’ எடுத்த நபருக்கு, சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதி ஒருவன் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது காரை மோதிவிட்டு, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றான். அந்த தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி, தீவிரவாதி உட்பட 5 பேர் பலியாகினர். 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 7 பேரை லண்டன் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஒருவர் ‘செல்பி’ எடுக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அந்த புகைப்படத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ‘செல்பி’ ஸ்டிக்கில் தனது மொபைல் போனை வைத்து தாக்குதலை ‘செல்பி’ எடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது மிகவும் கொடூரமான செயல் என சமூக வலைதளங்களில் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Similar News