செய்திகள்

விமானங்களில் லேப்டாப் எடுத்துவர தடை - அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் அரசு முடிவு

Published On 2017-03-21 18:02 GMT   |   Update On 2017-03-21 18:02 GMT
6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
லண்டன்:

6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு இன்று தடை விதித்திருந்தது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

வளைகுடா நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து மேற்சொன்ன பொருட்களை எடுத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு துருக்கி அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா அரசு அறிவித்துள்ள இதே திட்டத்தை பிரிட்டன் அரசும் அமல்படுத்தி உள்ளது. துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா, சவூதி அரேபியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டனுக்கு வரும் போது விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐ-பேடு போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர பிரிட்டன் தடை விதித்துள்ளது.

லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் உள்ளே வெடிக்கும் விதமான வெடிபொருட்கள் ஏதேனும் பதுக்கிவைத்து கொண்டு வரலாம் என கருதுவதால் இந்த முடிவை பிரிட்டன் அரசு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News