செய்திகள்

காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது - ஐ.நா சபையில் இந்தியா வாதம்

Published On 2017-03-01 13:39 GMT   |   Update On 2017-03-01 13:39 GMT
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது என ஐ.நா சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள மனித உரிமைகள் ஆணைய அமர்வின் 34-வது கூட்டம் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர். குறிப்பாக வளைகுடா நாடுகளில் போரில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பது குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெற்றன.

இந்தியா சார்பில் பங்கேற்றுப் பேசிய ஐ.நா-வுக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதி அஜித் குமார் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.



கூட்டத்தில் அவர் பேசியபோது, “பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை உருவாக்கி அனுப்பியது. ஆனால், அது தற்போது உருவாக்கியவர்களை விழுங்கி வருகிறது. காஷ்மீரை சொந்தம் கொண்டாட பாகிஸ்தான் தேவையற்ற ஆவணங்களை ஐ.நா.விடம் அளித்து தீர்மானத்தை நிறைவேற்றி, தவறான வழிமுறையை கையாண்டு காஷ்மீரின் சில பகுதிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

காஷ்மீர் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இந்தியா செயல்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News