செய்திகள்

பூமியில் இருந்து சூரியனுக்கு 'ரோபோடிக்' விண்கலம்: நாசா அதிரடி திட்டம்

Published On 2017-02-28 05:10 GMT   |   Update On 2017-02-28 05:10 GMT
பூமியில் இருந்து 15 கோடி கி.மீ. தூரத்தில் இருக்கும் சூரியனுக்கு 'ரோபோடிக்' விண்கலத்தை அனுப்பு நாசா திட்டமிட்டுள்ளது.
வாஷிங்டன்:

சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பூமியில் இருந்து 14 கோடியே 90 லட்சம் கி.மீட்டர் தொலைவில் சூரியன் உள்ளது.

மற்ற கிரகங்களை விட கடுமையான வெப்பம் கொண்டது. எனவே அதற்கு ஏற்றாற்போல் விசே‌ஷ விண்கலம் தயாரித்து அனுப்பப்பட உள்ளது. இதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இது ‘நாசா’ விஞ்ஞானிகளின் முதல் முயற்சி என காட்டார்ட் விண்வெளி மைய விஞ்ஞானி எரிக்- கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். சூரியனை மிக நெருக்கத்தில் சென்று ஆய்வு செய்ய முடியாது. அதே நேரத்தில் அதன் மேற்பரப்பில் ஆய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

சூரியனின் சுற்றுப்புற தட்பவெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதற்கு தகுந்தாற் போன்று வெப்பத்தை தாங்க கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்படும். அது அடுத்த ஆண்டு அதாவது 2018-ல் சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News