செய்திகள்

பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் 4 பயங்கரவாதிகள் பலி

Published On 2017-02-26 21:34 GMT   |   Update On 2017-02-26 21:34 GMT
‘ராத் உல் பசாத்’ என்ற பெயரில் நடத்தப்படுகிற தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில், இதுவரை 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் சமீப காலமாக நடந்து வந்த தீவிரவாத தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில், தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையை அந்த நாட்டு அரசு முடுக்கி விட்டுள்ளது.

‘ராத் உல் பசாத்’ என்ற பெயரில் நடத்தப்படுகிற இந்த நடவடிக்கையில், இதுவரை 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த நடவடிக்கையில் துணை ராணுவமும், பிற சட்ட அமலாக்க முகமைகளும் ஈடுபட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தான் தலீபான் இயக்கத்துடன் தொடர்புடைய ‘ஜமாத் உல் அக்ரார்’ குழுவினரும் அடங்குவர்.

ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News