செய்திகள்

ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி: அதிபர் டிரம்ப் பாய்ச்சல்

Published On 2017-02-18 00:13 GMT   |   Update On 2017-02-18 00:13 GMT
ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என்று அதிபர் டொனால்டு டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பும், பின்பும் டொனால்டு டிரம்ப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது வாரவிடுமுறையை புளோரிடாவில் உள்ள மார்-ய-லகோ பகுதி இல்லத்திற்கு சென்ற சிறிது நேரத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபோன்ற கருத்தினை பதிவிட்டுள்ளார்.



CNN, ABC, CBS போன்ற செய்தி நிறுவனங்களில் குறிப்பிட்டிருந்த டிரம்ப், போலியான செய்தி ஊடங்கங்கள் என்று சாடியிருந்தார்.

மேலும், மற்றொரு டுவிட்டர் பதவில், ”ஒரு நல்ல செய்தியாளர் சந்திப்பை இதுவரை பார்த்ததில்லை என்று ரஷ் லிம்பக் என்ற ஊடகவியலாளர் கூறி இருந்தார். இதனை பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். போலி ஊடகங்கள் இதனை வித்தியாசமாக, நேர்மையற்ற முறையில் அணுகுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முந்தையை அமெரிக்க அதிபர்கள் பலரும் ஊடகங்களை விமர்சித்துள்ளனர். இருப்பினும் டிரம்பின் விமர்சன மொழி மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News