செய்திகள்

ஏமனில் கிளர்ச்சியாளர்கள், அரசு படைகள் இடையே கடும் மோதல்: 70 பேர் பலி

Published On 2017-01-22 17:15 GMT   |   Update On 2017-01-22 17:15 GMT
ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு தரப்பு படைகள் இடையே நடைபெற்ற கடுமையான மோதிலில் 70 பேர் பலியாகினர்.
சனா:

ஏமனில் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

தலைநகர் கனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தனி அரசு நடத்தி வருகின்றனர். 

எனவே அதிபர் மன்சூர் ஹாதி ஏடனை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு சவுதி ஆதரவு கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளன.

இதனால் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படை ஆதரவு பெற்ற ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. 21 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டு போரில் இதுவரை 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், ஏமனில் கடந்த இரண்டு நாட்களாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு தரப்பு படைகள் இடையே நடைபெற்ற கடுமையான மோதிலில் 70 பேர் பலியாகினர். 

சவுதி தலைமையிலான கூட்டுப் படை அல்-மந்தப் பகுதியில் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 52 பேர் கொல்லப்பட்டனர். அதில் அரசு தரப்பு படையைச் சேர்ந்த 14 பேர் பலியாகினர்.

Similar News