செய்திகள்

சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 தீவிரவாதிகள் பலி

Published On 2017-01-20 09:17 GMT   |   Update On 2017-01-20 10:10 GMT
சிரியாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பெய்ரூட்:

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முன்னாள் அல்-கொய்தா உடன் தொடர்புடைய பெடே அல்-ஷாம் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களின் முகாம்களை குறி வைத்து இன்று வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமைக்கான சிரிய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

அலெப்போ மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை என்று கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. 

சிரியாவில் பெடே அல்-ஷாம் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை, அதிபர் ஆசாத் ஆதரவு படைகள் மற்றும் அதன் கூட்டணியான ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News